தொடர்ந்து அவரது உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முருகேசனை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முருகேசன் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என 500 க்கும் மேற்பட்டோர் மழையூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என குற்றம் சாட்டி, பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். மேலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.