புதுக்கோட்டை: விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அடுத்த கீழாத்தூர், ஜீவா நகரை சேர்ந்தவர் சாமிவேல்(60). இவருக்கு திருமணம் ஆகி 35 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நீடித்த தீராத வயிற்று வலி காரணமாக நேற்று திடீரென்று ஜீவா நகரில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மகன் அளித்த புகாரில் வடகாடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி