புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் அடையாளம் தெரியாத தனிநபர் ஒருவர் பெரிய கட்டையுடன் பொதுமக்களை தாக்க முயற்சித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இந்த நபரை மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.