தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தன்னை போலீசார் அழைத்து சென்று அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தனது சகோதரியிடம் வருந்தியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவத்தை கண்டித்து கிராமமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கறம்பக்குடி, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதியில் ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று (ஏப்ரல் 3) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்