முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் காலையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களை அந்தரத்தில் சுழல் விட்டதை ஊர் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து மகிழ்ந்தனர். மங்கனாபட்டி ஊர் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். போட்டியில் 650 மாடுகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு