புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு செருப்பு விற்பனை கடையில், வாங்கிய காலணிக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஒரு ரவுடி, கடையின் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடை உரிமையாளர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் உடனடியாக அந்த ரவுடியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.