புதுச்சேரியில், தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை (பிப்ரவரி 12)வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. வங்கி, போக்குவரத்து, என பல துறைகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.