புதுச்சேரி: காதலர் தின ஆஃபர்.. பாரில் ரைடு செய்த கலால்துறை

புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஆஃபர்கள் குறித்து தகவல் அறிந்த கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா, கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு 'ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்' என்ற விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது கலால் விதிகளுக்கு எதிரானது என்றும், அவ்வாறு ஆஃபர் விலையில் மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி