புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சரண். நடிகர் விஜய்யின் ரசிகரான இவர் தவெக கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார். தவெக கட்சி கொடியை அவர் ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அரியாங்குப்பம் கடலில் 8 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை அசைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.