காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை தாமதம் குறித்த புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்த ஆட்சியர், நாய்க்கடி மருந்துகள் இருப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டார். ஸ்கேன் மையம், தீவிர சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்த ஆட்சியர், நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், பணிவுடன் நடந்து கொள்ளவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.