ஆயுஷ்மான் பாரத் விழிப்புணர்வு நடைபயணத்தை துவக்கிய முதல்வர்

ஆயுஷ்மான் பாரத் இலவச மருந்துவக்காப்பீடு திட்டம் புதுச்சேரியில் ஆகஸ்ட் மாதம் 2010 ஆண்டு துவங்கப்பட்டது.

இத்திட்டம் துவங்கி 5 ஆண்டுகள் முடிந்து 6-ஆம் ஆண்டு துவக்கத்தை கொண்டாடும் வகையில், மத்திய அரசும், மாநில அரசும் இணைத்து "ஆயுஷ்மான் பார்த் பக்வாரா" என்கின்ற விழிப்புணர்வு நடை பயணம் இன்று (செப் 30) நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே தொடங்கிய நடைபயணத்தை சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலநமுகொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் துணை இயக்குநர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தலக்ஷ்மி தலைமையில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று புதுச்சேரி மக்களுக்கு ஆயுஷ்மான் பார்த் இலவச மருந்துவக்காப்பீடு திட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளையும் "புதுச்சேரி மாநில சுகாதார நிறுவன ஊழியர்கள் சிறப்பாக செய்தனர்.

தொடர்புடைய செய்தி