இந்நிலையில் நாளை முதல் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டி புதுச்சேரியில் உள்ள தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது, இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு படகுகளுக்குச் சிறப்புப் பூஜை செய்து கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
இந்தச் சிறப்புப் பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் மற்றும் புதுச்சேரி மீன்பிடித் துறைமுகவிசைப்படகு உரிமையாளர் நலச்சங்கத்தினர், பல்வேறு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.