புதுடெல்லியில் உலக AI மாநாடு நடக்கும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அரை நிர்வாணமாக மாநாட்டு வளாகத்திற்குள் நுழைந்து நாட்டின் மரியாதையை குலைத்ததாகக் கூறி புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகம் முன் பாஜக இளைஞர் அணியினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்து பாஜகவினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.