சபாநாயகர் பிறந்தநாளையொட்டி விளக்கு பூஜை நடைபெற்றது.

மணவெளி சட்டமன்றத் தொகுதி பாஜக மகளிரணி சார்பில், சட்டப்பேரவைத் தலைவர் திரு. செல்வம் ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பூரணாங்குப்பம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் சிறப்பு விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தலைவர் கலந்துகொண்டு வழிபட்டார். பின்னர் பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. பாஜக தொகுதி தலைவர் யோக பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மாநில, தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி