மகளிர் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ஆனந்த கௌரி அவர்கள் தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்வில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.