காரைக்கால் அடுத்த திருபட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவிழி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ விழி வரதராஜப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் கருட வாகனத்தில் சேவைசாதித்த படி வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.