இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 25) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் த. வெ. க தொண்டர்கள் நசீர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் வேலு நாச்சியாருக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் த. வெ. க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.