காரைக்கால் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வருகை தந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள் காரைக்கால் அடுத்த நேரு நகரில் அமைந்துள்ள மத்திய அரசின் அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வருகை தந்தார்கள். அங்கு அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் மத்திய இணை அமைச்சர் அவர்கள் கலந்துரையாடல் நடத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.