காரைக்கால்: இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் இன்று ஜூன் 05 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம் நாளை ஜூன் 06 நடைபெறுவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று ஜூன் 05 ஆம் தேதி மற்றும் ஜூன் 06 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி