காரைக்கால்: ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை விழா

காரைக்கால் அடுத்த திருபட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் இன்று பங்குனி மாதம் சூரிய பூஜை காலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் சுவாமி மீது விழுந்தபோது சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து பல்வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி