புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி அரசின் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை புரிந்து நாளை (13.06.2025) காலையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேவைகளை வழங்க உள்ளார்கள். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.