காரைக்கால் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: - காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே கனரக வாகனங்களுக்கு நகர் பகுதிக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் கல், மண், நிலக்கரி மற்றும் இதர லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் நகரப் பகுதியை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.