புதுச்சேரி மின்துறையில் 177 கட்டுமான உதவியாளர்களை நேரடி நியமனம் மூலம் பணியமர்த்துவதற்கு புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தேர்வானது மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இதற்கென்று பிரத்தியேக எழுத்து தேர்வு ஏதும் இல்லை. இதற்காக ஆன்லைன் போர்டல் ஒன்று விரைவில் உருவாக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in வலைதளத்தின் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.