புதுச்சேரி: ஜவுளி கடைகளில் திருட்டு

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள இரண்டு ஜவுளிக் கடைகளில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் புகுந்து, கல்லா பெட்டிகளில் இருந்த ₹32,000 ரொக்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர். கடைகளின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், துணிகளைத் திருடாமல் பணத்தை மட்டும் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி