புதுச்சேரி காவல்துறை சார்பில் மக்கள் மன்றம் என்ற பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம் இன்று (ஜூன் 14) காரைக்கால் மாவட்டம் நகர காவல் நிலையத்தில் தெற்கு காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்தனர்.