காரைக்காலை சேர்ந்த தையல்நாயகி என்பவர் தான் வாங்கிய எல்இடி டிவி சரிவர இயங்கவில்லை, அதை சரிசெய்வதில் சேவை குறைபாடு உள்ளதால் புதிய டிவி வழங்க உத்தரவிடக் கோரி தனியார் நிறுவனம் மீது நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை அடுத்து தனியார் நிறுவனத்தால் புதிய எல்.இ.டி டிவி மாற்றித் தரப்பட்டதுடன், நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.10,000 மனுதாரருக்கு வழங்கப்பட்டது.