காரைக்கால் அருகே கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் காரைக்கால் மாவட்டம் தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கண்காட்சியில் பசுமாடுகள், எருதுகள், கிடாரிகள் மற்றும் சேவல்கள், வான்கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடைகளுக்கான பரிசுகளை அதன் உரிமையாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி