காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு, நாளை மே 27ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இஷிதா ராத்தி IAS உத்தரவின்படி, அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இதற்கு மாற்றாக ஜூன் 6ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை Negotiable Instruments Act கீழ் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.