காரைக்கால்: நாய்க்கடி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

காரைக்கால் மாவட்டத்தில், குறிப்பாக நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளது. இதனால் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு அரசு நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. எம். எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி