காரைக்கால் பகுதிகளில் சரிவர குப்பைகள் சேகரிக்கப்பட வில்லை என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவித்தனர். இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் குப்பைகள் சரிவர சேகரிக்கப்பட வேண்டும், ஆட்கள் பற்றாக்குறை போக்கி கூடுதல் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.