காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கதர் ஆடை நிறுவனத்தில் கதர் ஆடை விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், காந்தி ஜெயந்தி தினமான இன்று (அக் 2 ) முதலில் வரும் நூறு நபர்களுக்கு ஒரு வேட்டி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பெரும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் ஒரு ரூபாய்க்கு வேட்டி வாங்க கடைகளில் முண்டியடித்து சென்று வேட்டி வாங்கிச் சென்றனர்.