காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் காரைக்கால் வடக்கு தொகுதியில் உள்ள கிளிஞ்சல்மேடு மற்றும் கீழகாசாகுடிமேடு கிராமத்தினைச் சேர்ந்த மீன் விற்பனை செய்யும் மீனவப் பெண்களுக்கு இலவச ஐஸ் பெட்டிக்கு விண்ணபித்தவர்களில் தகுதிவாய்ந்த மீன் விற்பனை செய்யும் மீனவ மகளிர்க்கு முறையே இலவச ஐஸ் பெட்டிகளை புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் அவர்கள் பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.