புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று புதுச்சேரி அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.