காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் தலைமையில் காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட அறு மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் காரைக்கால் மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த மீன்வளத்துறை துணை இயக்குனர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.