காரைக்காலில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருப்பட்டினம் காவல் நிலையம் சார்பில் இன்று அரசு பள்ளி மாணவர்கள் மூலமாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

தொடர்புடைய செய்தி