அங்கன்வாடி மையத்தில் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் நிகழ்வு

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம வளர்ச்சி திட்டமான "மக்களை தேடி மாவட்ட ஆட்சியர்" நிகழ்ச்சி இன்று (ஜனவரி 2) ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் உட்பட்ட நடுகளம்பேட் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக நடுகளம்பேட் கிராம எல்லையில் அப்பகுதி பொதுமக்கள் தரை தப்பட்டைகள் முழங்க பட்டாசுகள் வெடித்தும் ஆட்சியர் அவர்களை உற்சாகபடுத்தி மாலைகள் அணிவித்து வரவேற்றனர். 

இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி