காரைக்கால்: சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே ஸ்ரீசனிபகவானை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி