காரைக்கால்: சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் சனிபகவானை தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்புடைய செய்தி