காரைக்கால்: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முதல்வர் பங்கேற்பு

காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாமிய ஜமாத்தார்கள் ஏற்பாட்டில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நோன்பு திறக்கும் நிகழ்வில் சிறப்பு துவாக்கள் ஓதப்பட்டன. இந்த நிகழ்வில் புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேல், புதுச்சேரி மாநில அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி