காரைக்கால் அடுத்த நெடுங்காடு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயத்தின் 93வது ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித அந்தோனியார் தேர் பவனி வீதியுலா நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு திருப்பலியினை தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோனியார் வீதியுலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.