சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓவியம்

காரைக்காலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன. மாவட்ட ஆட்சியர் இஷதா ரெட்டி இந்த ஓவியங்களை நேரில் பார்வையிட்டு, நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியைப் பாராட்டினார். இயற்கையைப் பாதுகாக்கும் செய்திகளைக் கொண்ட இந்த ஓவியங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பலர் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் திரு சுபாஷ் மற்றும் அரசு அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி