காரைக்காலில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்வின் பத்தாவது நாளான இன்று திருநள்ளாறு கொம்யூனை சேர்ந்த சேத்தூர் கிராமத்தில் வேளாண்மையில் உயிர்மக்கரி பயன்பாடு குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் முனைவர் ரவி உயிர்மக்கரியின் பண்புகள், பயன்கள் மற்றும் பயிர்களுக்கு அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி விழிப்புணர்வு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.