புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி இயக்ககம், புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3. 0 விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நெடுங்காடு பஞ்சாயத்து மணல்மேடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.