புதுவை: தொழிலாளர் துறை சார்பில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி மாநில தொழிலாளர் துறை சார்பாக காரைக்கால் மாவட்ட தொழிற்பழகுநர் பயிற்சி நிலையம் நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பதிவு மற்றும் சேர்க்கை முகாம் திருபட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 09.06.2025 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என்று தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி