புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.