வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். மேலும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இன்று முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 28-க்குள் பரிசீலிக்கப்பட்டு, 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும். voterportal.eci.gov.in மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நன்றி: News18