கையெழுத்திட்டத்தில் கர்வம்கொள்கிறேன் - கவிஞர் வைரமுத்து

திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதில், கையெழுத்திட்ட கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், “நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தில் நானும் கையொப்பமிட்டேன். நீட் என்பது கல்விபேதமுள்ள தேசத்தில் ஒரு சமூக அநீதி என்றேன். நீட்தேர்வு மருத்துவத்தில் சேர்த்துவிடுவதற்கு மாறாகச் சிலரை மரணத்தில் சேர்த்துவிடுவதை அனுமதிக்க முடியாது என்றேன். நீட் விலக்கு மசோதாவில் குடியரசுத் தலைவர் கையொப்பமிட வேண்டும் மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕