புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், "சட்ட விதிமுறைகளை மீறி 'கள் ஓர் உணவு' என தவறான பிரச்சாரம் செய்யும் சீமான் ’கள்’ இறக்கியதுடன், அரிவாளை எடுத்துத் தூக்கிக் காட்டி காவல்துறைக்குக் கொலை எச்சரிக்கை விடுத்துள்ளார். சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படவில்லையெனில், தமிழ்நாடு எங்கும் புதிய தமிழகம் சார்பாக கடும் போராட்டம் வெடிக்கும்" என்றார்.