ஈரானில் தொடரும் போராட்டம்.. பலி எண்ணிக்கை 2,571 ஆக உயர்வு

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, அரசு மற்றும் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், போராட்டம் மற்றும் வன்முறைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி