அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யை மோசமாக, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டைம்ஸ் சதுக்கத்தில் டிஜிட்டல் விளம்பரம் செய்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர். விஷ்ணு சிலை வழக்கில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் 'தெய்வத்திடம் கேளுங்கள்' என கூறிய கருத்தைத் தொடர்ந்து, இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.